மதுரை நபருக்கு 'சமூக பரவலால்' கொரோனா?

மதுரை: மதுரையை சேர்ந்த நபருக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அவர் வெளிநாட்டிலிருந்து வராதவர் என்பதால், 'சமூக பரவலில்' தொற்று பரவியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து, வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 9 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.