புவனேஷ்வர்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது மூன்று மாத சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கும் மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரணத்திற்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்வர்